தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 22) பிகார் செல்ல உள்ள நிலையில் ட்விட்டரில் கோ பேக் ஸ்டாலின் (#GoBackStalin ) என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
2024 ஆம் ஆண்டு நடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு உள்ள கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக பாட்னாவில் நாளை மறுநாள்(ஜூன் 23) ஆம் தேதி எதிர்கட்சிகள் கூட்டத்தை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் நிதிஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.
அதன்படி, நேற்று(ஜூன் 20) திருவாரூரில் நடைபெற்ற கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின், “வரும் 23ஆம் தேதி பிகார் தலைநகர் பாட்னாவில் மதச்சார்பற்ற ஜனநாயக கட்சித் தலைவர்களின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு, சர்வாதிகாரம் என்பது காட்டுத்தீ’ என்று சொன்னவர் கலைஞர்.
அவர் கூறியபடி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்துவரும் பாஜக எனும் காட்டுத்தீயை அணைக்கவேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்றுவதற்கான நடவடிக்கையை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் எடுத்துள்ளார். அதில் நானும் பங்கேற்கிறேன்.
பாஜகவிற்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாடு, அகில இந்திய அளவிலும் எதிரொலிக்க வேண்டும். அதன் முன்னோட்டமாக தான் பிகாரில் மாநாடு நடக்கிறது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(ஜூன் 22) பிகார் செல்லவிருக்கும் நிலையில் கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
வழக்கமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வரும் போதெல்லாம் திமுக எதிர்கட்சியாக இருந்த சமயங்களில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மணிக் கணக்கில் மேக்கப் போடும் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படம்!
அரசியலுக்கு வருவரா விஜய்?: சீறிய திருமா
எந்த விதை போட்டமோ அது தான் முளைக்கும்…