அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கு!
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
டெல்லி பட்ஜெட் தாக்கல்!
2023-24 ஆம் ஆண்டிற்கான டெல்லி பட்ஜெட்டிற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இன்று (மார்ச் 22) நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
சர்வதேச தொலைத்தொடர்பு மற்றும் கண்காணிப்பு மையம்!
இந்தியாவிற்கான சர்வதேச தொலைத்தொடர்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
தெலுங்கு வருடப்பிறப்பு!
இன்று தெலுங்கு வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கிராம சபைக் கூட்டம்!
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
3வது ஒருநாள் போட்டி!
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 305வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பதான் ஓடிடி ரிலீஸ்!
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
கோவை குணா உடல் தகனம்!
உடல்நலக் குறைவால் காலமான நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது.
சுங்கக் கட்டணம் உயர்வு: லாரி உரிமையாளர்கள் போராட்டம்!