Dmk announce protest in parliament

நாடாளுமன்றத்தில் திமுக கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

அரசியல்

Dmk announce protest in parliament

கடந்த ஜனவரி 31 அன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியது.

குடியரசு‌த் தலைவர் உரைக்கு நன்றி  தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நேற்று (பிப்ரவரி 2) நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு திமுக சார்பில் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி. ஆர்.பாலு, மத்திய அரசு தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை விடுவிக்காததை கண்டித்தும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநர்கள் செயல்படுவதாகவும் பேசினார்.

இந்தநிலையில், தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்காததை கண்டித்து பிப்ரவரி 8-ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து டி.ஆர்.பாலு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ளநிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஓரவஞ்சனையைக் கண்டித்து,

பிப்ரவரி 8 அன்று காலை  10.00 மணிக்கு திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்.பி.க்கள் சார்பில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு  கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்  கொள்கிறேன்.

தமிழ்நாடு புறக்கணிப்பு; முதல்வர் கண்டனம்.

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி,  வரும் நிதியாண்டு 2024-25  க்கான மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மக்களவையில் தாக்கல் செய்தார்.

அதில், அண்மையில் 2023 டிசம்பர் மாதத்தில் தமிழ் நாட்டைப் புரட்டிப் போட்ட வரலாறு காணாத புயல் மழை வெள்ள சேதங்களை சரிசெய்யவும் நிவாரண உதவியாகவும் 37,000 கோடி ரூபாய் தந்து உதவிட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு கோரிக்கை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

அதைப் போல,  மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான உரிய நிதி ஓதுக்கீடு குறித்தும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்புக்கள் இடம் பெறவில்லை.

இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு  அன்னிய முதலீடு திரட்டும் நோக்கில் ஸ்பெயின் நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசை வன்மையாக கண்டித்ததுடன்,

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காந்தி சிலை எதிரில் கருஞ்சட்டை அணிந்து போராட்டம் நடத்துவர் என்றும் அறிவித்தார்.

அதன்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிப்ரவரி 8 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணிகண்டன் நடிக்கும் “லவ்வர்”: ஸ்பெஷல் என்ன?

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!

Dmk announce protest in parliament

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *