பிடிஆர் ஆடியோ: முதல்வர் விளக்கம்!

அரசியல்

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோக்கள் வெளியிட்டு மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நான் விளம்பரம் தேடி தர விரும்பவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த ஆடியோ உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தன்னையும் முதல்வரையும் பிரிக்க நினைக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்று பிடிஆர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்தநிலையில் பிடிஆர் நேற்று முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதுகுறித்து ஸ்டாலினை சந்தித்த பிடிஆர்: ஏன்? என்று மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், பிடிஆர் விவகாரத்தில் அவரை முதலில் ரிசைன் பண்ண சொல்லிய முதல்வர் ஸ்டாலினிடம் துரைமுருகன் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் “பிடிஆரை ரிசைன் பண்ண வச்சா அது பிஜேபிக்கு கிடைத்த வெற்றி ஆகிடாதா?இன்னும் சில ஆடியோக்கள் வெளியிட்டால் அந்த அமைச்சர்களும் ரிசைன் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்படுமே” என்றெல்லாம் பேசியதால் முதல்வர் சற்று கோபம் தணிந்ததாக திமுக வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

பிடிஆர் ஆடியோ குறித்து முதல்வர் இதுவரை எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் இருந்தார்.

இந்தநிலையில் உங்களில் ஒருவன் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசிய வீடியோ இன்று (மே 2) வெளியாகி உள்ளது.

அதில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேரில் வெளியான ஆடியோ குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மேலும் இதுகுறித்து பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று செயல்படும்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *