ஆந்திரா காங்கிரஸ் கட்சி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம்!

Published On:

| By Selvam

ஆந்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று (ஜனவரி 16) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆந்திரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளாவை நியமித்துள்ளார்.

அதேபோல, ஆந்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கிதுகு ருத்ரா ராஜூ, காங்கிரஸ் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில தலைவராக கிதுகு ருத்ரா ராஜூ ஆற்றிய பணிகளை காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா, கடந்த ஜனவரி 4-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்தநிலையில், இரண்டு வாரங்களுக்குள் அவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆளுநருக்கு திருவள்ளுவர் பற்றிய அடிப்படை புரிதல் இல்லை: கனிமொழி காட்டம்!

வசூலில் அசத்தும் அயலான்… எவ்ளோ வசூல் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share