ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா? அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு நம்ம அண்ணன் செல்லூர் ராஜூ, “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தின்னு” வீடியோ போட்ருக்காரு…

இதை பார்த்து நம்ம ரத்தத்தின் ரத்தங்கள் ஷாக் ஆக, “இந்த வீடியோவ அட்மின் போடல நான் தான் போட்டேன்னு” ஸ்ட்ராங்க சொல்லிருக்காரு..

ஆல்ரெடி குழம்பி போய் இருக்குற அதிமுக குட்டையில, நம்ம அண்ணன் போற போக்குல ஒரு கல்ல எறிஞ்சு விளையாடிட்டு போயிருக்காப்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
கல் நெஞ்சம் is a word எதையும் தாங்கும் இதயம் is an emotion
கோழியின் கிறுக்கல்!!
உலகிலேயே மிகச் சிறந்த கண்டுபிடிப்பும், மிக மோசமான கண்டுபிடிப்பும், அலாரத்தின் “Snooze” தான்!!
ℳsd இதயவன்
“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம் ~ அண்ணாமலை
பாஸூ ஜாமீன் ல வெளியே வந்தவர் ஜாமீன் முடிந்தால் சிறைக்கு பேகாம சிங்கப்பூருக்கா போவாங்க ?!
balebalu
வங்கித் துறையின் நிகர லாபம் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டியது – பிரதமர் மோடி இத்தனை லாபம் வந்திருக்கே அப்போ இனிமே மினிமம் பேலன்ஸ் அபராதம், ATM charge, SMS charge எல்லாம் கிடையாது ன்னு தேர்தல் வாக்குறுதி கொடுக்கலாமே
வசந்த்
வைரமுத்து பேச்சை கேட்டது தப்பா போச்சு ஏன்டா
என்னாச்சு?
அவர் தான் எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோனு சொன்னாரு.
ஓ..அதான் எட்டு ஓட்டு போட்டியா?

கடைநிலை ஊழியன்

சார்ஜர் டு மொபைல் – என்ன பாஸ் 10 மணிக்கு எல்லாம் சார்ஜ் போட்டுடான்.. சீக்கிரம் தூங்க போரானோ..
மொபைல் – கொஞ்ச நேரத்துல எடுத்துருவான்.. நைட் யூஸ் பண்ணி பழகிட்டான்.. அவனால சீக்கிரம் எல்லாம் தூங்க முடியாது..
கோழியின் கிறுக்கல்!!
பிஸியா இருக்கேன்’னு சொன்னா ‘அப்புறம் பேசுறேன்’னு சொல்றவன் நண்பன், ‘காமெடி பண்ணாத’ன்னு பேச ஆரம்பிக்கிறவன் உயிர் நண்பன்!!
+1
1
+1
5
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *