சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் கேப்டனாக நான் தான் இருந்திருக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது, ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஒவ்வொரு அணியும் தங்கள் பகுதிகளை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரை “ஐகான் வீரர்” என்ற பெயரில் நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ளும் விதி ஒன்று இருந்தது.
ஆனால், சென்னையை சேர்ந்த நட்சத்திர வீரர் யாரும் இல்லாததால் சிஎஸ்கே அணி அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. இதன் காரணமாக, சிஎஸ்கே அணி அனைத்து வீரர்களையும் ஏலத்தில் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளானது.
அப்போது, இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்த வீரேந்திர சேவாக்கை தங்களது அணியில் எடுக்கவும், அவரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கவும் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இதுத்தொடர்பாக வீரேந்திர சேவாக்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக பேசிய அவர், “2008 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணியின் வீரர்களை தேர்வு செய்தவர் வி.பி.சந்திரசேகர். அவர் எனக்கு போன் செய்தார்.
‘சிஎஸ்கே அணியில் நீங்கள் விளையாட வேண்டும். டெல்லி டேர்டெவில்ஸ் அணி உங்களை ஐகான் வீரராக நியமிக்க திட்டமிட்டுள்ளது. நீங்கள் அதை மறுத்துவிடுங்கள்’ எனத் தெரிவித்தார். நான் சரி பார்க்கலாம் என்று கூறினேன்.
ஆனால், நான் அந்த ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஐகான் வீரராக ஆனேன். ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்திற்கும் நான் செல்லவில்லை. ஒருவேளை ஏலத்திற்கு சென்றிருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை வாங்கி இருப்பார்கள். சிஎஸ்கேவின் கேப்டனாகவும் என்னை நியமித்திருப்பார்கள். ஆனால், அது நடக்கவில்லை.
அந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி தோனியை வாங்கினர். தொடர்ந்து அவரை அணியின் கேப்டனாக நியமித்தனர்” என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம்… வீடியோ வெளியிட்ட இர்ஃபான்… சுகாதாரத் துறை நடவடிக்கை?
இளம் தலைவர் ராகுல்… சலசலப்பை கிளப்பிய செல்லூர் ராஜு