World Cancer Day : புற்றுநோய் பாதிப்பா? இனி அச்சப்படத் தேவையில்லை!

Published On:

| By christopher

Cancer is no longer to be feared

உலகளவில் புற்றுநோயால் 18.1 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆண்டுக்கு 10 மில்லியன் பேர் இறந்து வருவதாக புற்றுநோய் தொடர்பான ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பில் உத்திரப்பிரதேசம் முதலிடம், இரண்டாவது இடம் மஹாராஷ்டிரா, மூன்றாவது இடம் மத்திய பிரதேசம், நான்காவது இடம் பீகார், ஐந்தாவது இடத்தில் தமிழ் நாடு இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் ஆயிரத்துக்கு ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க சர்வதேச அளவில் பெரிய சமூகத்தை திரட்டுவதற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மின்னம்பலம் சார்பில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், இந்திய அணுக்கூறு மருந்தியல் (society of nuclear medicine) துறை தலைவருமான டாக்டர் பிரபுவிடம் பேசினோம்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியுமா? அதனால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியுமா? 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனி அச்சப்பட வேண்டாம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அணுக்கூறு மருந்தியல் கதிர் இயக்கத் தன்மைக்கொண்ட மருந்தினை நேரடியாக உடலில் செலுத்தி, நோயின் தன்மையை கண்டறியலாம். தீராத நோய்களையும் முழுமையாக குணப்படுத்தும் வழிமுறைகளை வழிகாட்டுதலை வழங்க முடியும்.

புற்றுநோய் வருவதை எப்படி அறிந்துக்கொள்வது?

எடைக்குறைவு ஏற்படுவது, பசியின்மை, வலி இல்லாத வீக்கம், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இதுபோன்ற சில அறிகுறிகள் ஏற்படும்.

உடலில் கதிர் இயக்கத் தன்மைக் கொண்ட பொருட்களை செலுத்தி நோய்களை கண்டறியும் பெட் சிடி ஸ்கேன் அரசு மருத்துவமனைகளில் உள்ளதா? 

ஸ்பெக்ட் (spec) சிடி செயற்கருவி உள்ளது. இதன் விலை ரூ.6 கோடி. அதைவிட நுணுக்கமாக கண்டறியும் மிஷின் பெட் சிடி (PET CT) இதன் மதிப்பு 15 முதல் 16 கோடி ரூபாய். சென்னை, சேலம், தஞ்சை, கோவை, மதுரை, கடலூர் போன்ற அரசு மருத்துவமனைகளில் பெட் சிடி ஸ்கேன் வசதி உள்ளது.

Cancer is no longer to be feared

இந்த பெட் சிடி ஸ்கேன் என்பது தனியார் மிஷின். இதில் நோயாளிகளை பரிசோதிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லை என்கிறார்களே?

உண்மைதான். இதன் மதிப்பு ரூ.6 கோடி. PPP (PRIVATE PUBLIC PARTNERSHIP) என்ற திட்டத்தில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெட் சிடி ஸ்கேன் வாங்கி அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்கிறார்கள். நோயாளிகளிடம் அதற்கான கட்டணம் அல்லது காப்பீடு திட்டத்தில் பணம் பெறப்படுகிறது.

பெட் சி டி ஸ்கேன் எதற்காக தனியாரிடம் ஒப்படைத்தனர்?

அது கவர்மென்ட் பாலிசி.

அணுக்கூறு மருந்தியல் முதுநிலை மருத்துவர்கள் தமிழக அரசு மருத்துவமனைகளில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

நான் ஒரே டாக்டர்தான்.

Cancer is no longer to be feared

அருகில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏழு முதுநிலை (MD) டாக்டர்கள் இருக்கிறார்களே?

அதனால் தான் பல நோயாளிகள் ஆந்திரா (திருப்பதி), கேரளா, ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

தற்போது தமிழக அரசு இதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி உலகம் தரம் வாய்ந்த அளவில் சிகிச்சை கொடுக்க தீவிரமான முயற்சிகளை எடுத்துள்ளார். எங்கள் டைரக்டரும் அன்றாடம் கவனம் செலுத்தி வருகிறார்.

Cancer is no longer to be feared

2025 இல் (PRICS) பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா என சுமார் 26 நாடுகள் கலந்துக்கொள்ளும் ஆராய்ச்சி மாநாடு தமிழகத்தில் நடைபெற உள்ளது.

மேலும், இனி உயர் ரக நவீன சிகிச்சை கொடுத்து மனித உயிர்களை காப்பாற்ற lutetivm மற்றும் Actinevm அணுக்கூறு மருந்தினை செலுத்தி தீராத நோய்களையும் தீர்க்க போகிறோம். அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இனி அச்சப்பட வேண்டாம்” என்றார் நம்பிக்கையான குரலில்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: நண்பர்களுடன் அவுட்டிங்… உங்களின் ஆடை  எப்படியிருக்க வேண்டும்?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சண்டே ஸ்பெஷல்:  ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்?

தளபதிய இயக்குறது யாரு? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.