Iஜீ தமிழில் மீண்டும் ரேஷ்மா?

Published On:

| By admin

நடிகை ரேஷ்மா ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘பூவே பூச்சூடவா’ ஹிட் சீரியலுக்கு பிறகு மீண்டும் வேறொரு சீரியல் மூலம் ஜீ தமிழுக்கே திரும்புகிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. அந்த சீரியலில் கதாநாயகனின் தம்பியாக நடித்த மதனுக்கும் ரேஷ்மாவுக்கும் அந்த சமயத்தில் நிஜத்தில் நட்பு ஏற்பட்டு பின்பு இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர்.

இப்போது இந்த ரியல் ஜோடி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அபி டெய்லர்ஸ்’ என்ற சீரியலில் இணைந்து ரீல் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேனலுக்கும் ரேஷ்மாவுக்கும் மனக்கசப்பு என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இது குறித்து ரேஷ்மா தரப்பு இன்னும் எதுவும் சொல்லவில்லை. அவர் தனது சமூக வலையள பக்கங்களில் இன்னும் ‘அபி டெய்லர்’ சீரியலில் தொடர்ந்து நடித்து வருவதாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடி அப்டேட் கொடுத்த வண்ணம் உள்ளார்.

மேலும் தற்போது ரேஷ்மா தன்னை பிரபலப்படுத்திய ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கே மீண்டும் வருகிறார் என சின்னத்திரை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

‘பூவே பூச்சூடவா’ இயக்குநர் தயாரிப்பாளர் என கிட்டத்தட்ட அதே டீம் தான் இந்த புது சீரியலிலும் இணைகிறார்கள். இதில் புது சீரியலில் தான் நாயகியாக ரேஷ்மா ஒப்பந்தமாகி உள்ளர். என்ன கதைக்களம், எப்போது இருந்து சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது என்ற விவரங்கள் எல்லாம் விரைவில் தொலைக்காட்சி தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது. இதில் ரேஷ்மாவுக்கு ஜோடியாக அவரது கணவர் மதனே நடிக்க இருக்கிறாரா அல்லது அவரது ரீல் ஹிட் ஜோடியான தினேஷூடன் இணைய இருக்கிறாரா என்பதும் இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share