‘எனக்கு உருது எல்லாம் தெரியாது’: தர்பார் வீடியோ!

entertainment

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் தர்பார் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் – நயன்தாரா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் ஜனவரி 9ஆம் தேதி தர்பார் திரைப்படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ நேற்று (ஜனவரி 1) வெளியானது. இதைப் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 30 நொடிகள் ஓடும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தன்னிடம் பேச முடியாமல் பதற்றமடையும் ரஜினிகாந்த்தை நயன்தாரா கலாய்ப்பது போன்று அதில் காட்சிகள் அமைந்துள்ளன. இந்த ரொமான்டிக் காமெடி வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *