Qஅத்வானியை அழவைத்த திரைப்படம்!

entertainment

மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி இந்தி திரைப்படம் ஒன்றைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பிரபல இந்தி இயக்குநர் விது வினோத் சோப்ராவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஷிகாரா’. காஷ்மீர் பண்டிட்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தைப் பார்த்து எல்.கே. அத்வானி உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார்.

1990-ஆம் ஆண்டில் பல இலட்சக்கணக்கான காஷ்மீர் பண்டிட்கள் அவர்கள் வாழ்ந்து வந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இத்தனை வருடங்கள் கடந்தும் பிறந்த மண்ணில் மீண்டும் வாழ அவர்களால் முடியவில்லை. சொந்த நாட்டிலேயே அகதிகள் போல வாழ்ந்து வரும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதாக ஷிகாரா திரைப்படம் அமைந்துள்ளது. இந்தப்படத்தின் சிறப்பு காட்சி பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பிரத்யேமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

படம் பார்த்து முடித்ததும் இயக்குநர் விது வினோத் சோப்ராவை அழைத்துப் பாராட்டிய அத்வானி,

உணர்ச்சி பெருக்கில் கண் கலங்கினார்.

திரைப்படம் பார்த்து நெகிழ்ச்சியில் அத்வானி கண் கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *