‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திற்காக மைசூர் செல்வதாக சிவாங்கி தகவல் பகிர்ந்திருக்கிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பிரபலமாகி அடுத்து ‘டான்’ படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் சிவாங்கி. இப்பொழுது இவரது கைவசம் ‘காசேதான் கடவுளடா’, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன.
இதில் ‘டான்’ திரைப்படம் வெளியாகி அவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்பொழுது நடிகர் வடிவேலு பல வருடங்களுக்கு பிறகு திரையில் மீண்டும் வர இருக்கும் திரைப்படமான ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் நடிக்கிறார் சிவாங்கி. சென்னை, மைசூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் இதன் வேலைகள் தொடங்கியிருக்கிறது. சிவாங்கி, ரெடிங் கிங்ஸ்லே, யூடியூபர் பிரசாந்த் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்கின்றனர். ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக மைசூர் செல்கிறோம் என மூன்று பேரும் எடுத்த செல்ஃபியை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் சிவாங்கி.
சுராஜ் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் வடிவேலுவின் மகளாக சிவாங்கி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இசைப் பணிகள் லண்டனில் நிறைவடைந்துள்ள நிலையில் பிரபுதேவா இந்த படத்தில் ஒரு பாடலுக்காக வடிவேலுவுக்கு நடனம் அமைத்து இருக்கிறார்.
வடிவேலு பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்து இருக்கிறார். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் படத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளது. ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படம் தவிர வடிவேலு கையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படம், பின்பு ‘சந்திரமுகி 2’ ஆகிய படங்கள் இருக்கின்றன.
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலான இடைவெளிக்குப்பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள பல முக்கிய படங்களில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
**ஆதிரா**