‘நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும்’: சூரி சுவாரஸ்யம்!

entertainment

பிரபல காமெடி நடிகர் சூரி படப்பிடிப்புத் தளத்தில் பஜ்ஜி போடும் வீடியோ இணைய உலகில் அனைவரையும் கவர்ந்துள்ளது.

நடிகர் சூரி, 1998-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்துவருகிறார். தொடர்ந்து சிறிய வேடங்களில் நடித்துவந்த அவர் 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துவந்த அவர், விஜய் சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.

தற்போது ரஜினி நடிக்கும் ‘தலைவர் 168’ திரைப்படத்திலும், சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்திலும் நடித்துவருகிறார். இதில் சசிகுமார் படத்தின், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சூரி தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் சுட சுட மிளகாய் பஜ்ஜி போடுவது இடம்பெற்றுள்ளது. ட்விட்டரில் வீடியோவைப்பகிர்ந்த சூரி, “நீங்க ஷாட்டுக்கு கூப்பிடுங்க, இல்ல கூப்டாம போங்க. நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும்” என்று தனது பிரபல வசனத்தை நினைவுகூறும் விதமாக கேப்ஷன் வைத்துள்ளார். இந்த வீடியோ அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

பொதுவாக நடிகர் அஜித், தான் நடிக்கும் படங்களில் படப்பிடிப்பு நேரத்தில், தனது கையால் அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுப்பார். அதேவழியைப் பின்பற்றி சூரி பஜ்ஜி சுட்டது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *