இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டினை வெளியிட்டு இருக்கிறார்.
‘இசைஞானி’, ‘இசைக்கடவுள்’ என உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் புகழப்படும் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் பூஜை இன்று (மார்ச் 2௦) சென்னையில் நடைபெற்றது.
இதில் இளையராஜா, அருண் மாதேஸ்வரன், தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டு பர்ஸ்ட் லுக்கினை வெளியிட்டார்.
விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் கோபி நயினாரின் ‘மனுஷி’ படத்தினை, தன்னுடைய கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்தார்.
‘அறம்’ புகழ் கோபி நயினார் இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படம் உருவாகவிருக்கிறது.
Ilaiyaraaja Biopic: அவரோட பயோபிக்லயும் நடிக்கணும்… ஓபனாக பேசிய தனுஷ்
முன்னதாக ஆண்ட்ரியா இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. தற்போது மீண்டும் அவரே நாயகியாக நடிக்கவுள்ளாரா? இல்லை வேறு யாரேனும் நடிக்கிறார்களா? என்பது தெரியவில்லை.
விரைவில் படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக ‘விடுதலை 2’ படம் வெளியாகவுள்ளது. சூரி, விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘விடுதலை 2’ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-இரசிக பிரியா மாணவ நிருபர்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள்!
பட்டியலில் பெயர் மிஸ்ஸிங்… மாசெக்கள் கூட்டத்தைப் புறக்கணித்த எஸ்.ஆர். சிவலிங்கம்