விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து, நடிகை ரிஹானா தற்பொழுது வெளியேறி உள்ளார்.
விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய வெற்றியடைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இரண்டாவது பாகமும், தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ரிஹானா, தற்பொழுது இந்த சீரியலில் இருந்து வெளியேறி உள்ளார். மேலும் அவருக்கு பதிலாக சன் டிவி சீரியல் நடிகை மாதவி நடிக்க இருக்கிறாராம்.
இது பற்றி நடிகை ரிஹானா கூறும் பொழுது, ” முழுக்க முழுக்க பர்சனல் காரணங்களுக்காக தான் இந்த சீரியலில் இருந்து விடைபெறுகிறேன். என்னுடன் பணியாற்றிய அனைவரையும் மிஸ் செய்வேன்”, என்று கூறியுள்ளார்.
அதேபோல நேற்றைய தினம் (ஏப்ரல் 11) சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “மிஸ்டர் மனைவி” சீரியலில் இருந்து நடிகை ஷபானாவும் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவைக்கான தொழில் திட்டத்தை குஜராத்திற்கு மடைமாற்றிய பாஜக: ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தளபதி வழியில் சிவகார்த்திகேயன்… மரண மாஸ் தகவல் வெளியானது!