Thalapathy 69: மொத்தம் 4 ஹீரோயின்கள்… விஜயுடன் ஜோடி போடப்போவது யார்?

Published On:

| By Manjula

விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்? என, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68-வது படமான GOAT படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்றுள்ளது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரல் 14-ம் தேதியும், டீசர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியும் வெளியாகிறது.

இந்த படத்தை அடுத்து விஜய் தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்கிறார். லேட்டஸ்ட் நிலவரத்தின்படி ஹெச். வினோத் இப்படத்தினை இயக்குவது உறுதியாகியுள்ளது. டிவிவி என்டெயிர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தநிலையில் படத்தில் விஜயின் ஜோடியாக நடிக்க நான்கு ஹீரோயின்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத், தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி திரிஷா, மிருணாள் தாகூர், சமந்தா, அலியா பட் ஆகியோரில் ஒருவர் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளனர். இதில் திரிஷா, சமந்தா இருவரும் விஜயுடன் ஏற்கனவே படங்களில் நடித்து இருக்கின்றனர்.

மிருணாள் தாகூர், அலியா பட் இருவரும் இன்னும் தமிழில் என்ட்ரி கொடுக்கவில்லை. ஒருவேளை இந்த இருவரில் ஒருவர் நடிப்பது உறுதியானால், அவர்கள் கோலிவுட் என்ட்ரியும் இப்படத்தின் வாயிலாக நிகழும்.

அதோடு பிரெஷ் காம்போவாகவும் இருக்கும் என்பதால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். என்றாலும் விஜயின் ஜோடி யார் என்பதை நாம் அறிந்துகொள்ள, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அழைக்கும் ராகுல்… யோசிக்கும் ஸ்டாலின்… எங்கே, ஏன்?

நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு!

சம்மர் ஹாலிடேஸ்: சென்னை – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel