சம்மர் ஹாலிடேஸ்: சென்னை – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!

தமிழகம்

பள்ளி, கல்லூரி மாணவர்களின் கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி,

நாகர்கோவிலில் இருந்து இன்று (ஏப்ரல் 7) மற்றும் ஏப்ரல் 21-ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 12.10 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

அதேபோல மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 8 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மதியம் 3.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நாகர்கோவில் இருந்து ஏப்ரல் 14, 28 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 12.10 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 15,29 ஆகிய தேதிகளில் மதியம் 3.10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில்  மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

முன்னதாக சென்னை -நாகர்கோவில் இடையே வாரத்திற்கு மூன்று முறை வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் 4 கோடி பறிமுதல்… நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணமா?

பியூட்டி டிப்ஸ்: சம்மரில் முகம் பளபளப்புடன் இருக்க…

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *