பாலிவுட்டில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து, மிகப்பெரிய வெற்றி கொடுக்க கூடிய சூப்பர்ஸ்டார் நடிகர் என்றால் அது அமீர் கான் தான்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. அந்த படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியும் இது வரை வேறு எந்த புது படத்திலும் அமீர் கான் கமிட்டாக வில்லை.
இந்நிலையில் அமீர் கான் மும்பையில் இருந்து சென்னைக்கு தற்காலிகமாக குடியேற திட்டமிட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
அமீர்கானின் தாயாரான ஜூனத் ஹூசைனுக்கு கடந்த ஜூன் மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பிய அமீர்கானின் தாயார் நலமாக உள்ளார்.
தற்போது அவருக்கு மீண்டும் சிகிச்சை தேவைப்படுவதால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தாயாரை அருகில் இருந்தே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் மருத்துவமனைக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து, அங்கு சில மாதங்கள் தங்க அமீர் கான் திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
தாயார் ஜூனத் ஹூசைனுக்கு நல்லபடியாக சிகிச்சை முடிந்த பிறகு நடிகர் அமீர் கான் “சிதாரே ஜமீன் பார்” என்ற புதிய படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் 2007 ஆம் ஆண்டு அமீர் கான் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த ‘தாரே ஜமீன் பர்’ படத்தின் கதைக் கருவை கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
600 படுக்கைகள்… அருணை பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர்!
தலைவர் 170 : ரஜினி – அமிதாப் காட்சிகள் மும்பையில் ஷூட்டிங்!