Thalapathy 69: இயக்குனர் இவரா?.. ‘GOAT’ தயாரிப்பாளர் மேடையில் பேசிய Video வைரல்…!

சினிமா

‘ GOAT’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் விழா ஒன்றில் பேசி இருக்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் முழு நேர அரசியலில் களமிறங்க உள்ளார். இந்நிலையில் தனது 69 ஆவது படம் தான் கடைசி படமாக இருக்கும் என்று அறிவித்துள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தாலும், அந்த கடைசி திரைப்படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்? என்ற கேள்வி நிலவி வந்தது.

மேலும் இந்த திரைப்படத்தை தளபதி விஜய்யே தனது சொந்த செலவில்  தயாரிக்க உள்ளார் என்பது தான் லேட்டஸ்ட் தகவல். எந்த வகையில் பார்த்தாலும் தளபதி ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல ட்ரீட்டாக இருக்கப்போகிறது.

தற்பொழுது விஜய் பிசியாக ‘The Greatest Of All Time’ படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்தை, ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்  தயாரிக்கின்றனர்.

தளபதி விஜய் நடிக்கும் கடைசி திரைப்படத்தின் இயக்குனர் யாராக இருக்கும்? என்பதுதான் கோலிவுட்டின் ஹாட் டாபிக்.

இந்நிலையில ‘GOAT’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்பொழுது தளபதி 69 யார் இயக்க வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், ” இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க வேண்டும். தயாரிப்பாளராக நாங்கள் இருக்க வேண்டும்”, என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் இந்த காம்போவை சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்றாலும் அமைந்தால் நன்றாகத் தான் இருக்கும் என்று கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

-பிரியங்கா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் சென்னையில் கொள்ளை!

பிரபல சீரியல் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!

Video: நொடிக்கு நொடி பரபரப்பு… விஷாலின் ‘ரத்னம்’ ட்ரெய்லர் பக்கா மாஸ்..!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *