ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘ரத்னம்’ திரைப்படத்தின் மாஸ் டிரெய்லர் தற்பொழுது வெளியாகி உள்ளது.
தமிழில் முன்னணி இயக்குனராகத் திகழ்பவர் ஹரி. இவர் சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சிங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
இதில் ஹரி-விஷால் காம்போவில் வெளியான ‘தாமிரபரணி’ மிகப்பெரிய ஹிட் அடித்தது. ‘பூஜை’ கலவையான விமர்சனங்களை பெற்றாலும், டிவியில் அதிகம் டிஆர்பி வைத்திருக்கும் படமாக உள்ளது.
இந்தநிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ரத்னம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் விஷாலுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரகனி, யோகி பாபு போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படத்தில் முரட்டுத்தனமான இளைஞர் கதாபாத்திரத்தில் விஷால் நடித்திருக்கிறார். பரபர ஆக்ஷன் காட்சிகளுடன் சீனுக்கு, சீன் அதிரடியாக இருக்கிறது.
ஹீரோயின் பிரியா பவானி சங்கரை பாதுகாக்கப் போராடும் காதலராக விஷால் தோன்றியுள்ளார் . டிரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் இந்த காம்போ நிச்சயம் வெற்றி வாகை சூடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
வருகின்ற ஏப்ரல் 26-ம் தேதி ரத்னம் படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நடிகை வரலட்சுமி நிச்சயதார்த்தம்…. முதல்முறையாக மனம் திறந்த விஷால்
”எப்படி சலுகை காட்ட முடியும்?” : ராஜேஷ் தாஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி!
திமுக அதிகமான இடங்களில் வெற்றி பெறும்! ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு!