ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘கனா’. பிரிந்து கிடக்கும் அப்பா, மகள் ஒன்று சேரும் பாச போராட்டம் தான் இந்த சீரியலின் கதைக்களம்.
மேலும் ஓட்டப்பந்தயத்தில் பெரிய உயரங்களை அடைய விரும்புகிறார் சீரியலின் நாயகி. அவரின் கனவு நிறைவேறியதா? என்பதை எடுத்து சொல்வது தான் இதன் திரைக்கதை.
இதில் ஹீரோயினாக அன்பரசி என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் தர்ஷனா அசோகன். உன்னிகிருஷ்ணன் ஹீரோவாக நடித்தார். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் கடந்த மாதம் நடிகை தர்ஷனா அசோகன் திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் தான் அவர் சீரியலில் இருந்து விலகுகிறார் என்று அப்போதே கிசுகிசுக்கப்பட்டது.
எனவே அவருக்குப் பதிலாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை டோனிஷா நாயகியாக மாற்றப்பட்டார்.
இந்நிலையில் நடிகை தர்ஷனா அசோகனின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. பல் மருத்துவரான அவர் அபிஷேக் என்பவரை திருமணம் செய்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்பொழுது பெற்றோர்கள் சமூகத்துடன் திருமணம் முடித்துள்ளனர்.
அவரது கணவரும் மருத்துவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் திருமணத்திற்காக நடிப்பிற்கு பிரேக் விட்ட தர்ஷனா மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுப்பாரா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Video: நொடிக்கு நொடி பரபரப்பு… விஷாலின் ‘ரத்னம்’ ட்ரெய்லர் பக்கா மாஸ்..!
”எப்படி சலுகை காட்ட முடியும்?” : ராஜேஷ் தாஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி!
நடிகை வரலட்சுமி நிச்சயதார்த்தம்…. முதல்முறையாக மனம் திறந்த விஷால்