நடிகை வரலட்சுமி நிச்சயதார்த்தம்…. முதல்முறையாக மனம் திறந்த விஷால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், இதுவரை பேசாத பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. இந்த படத்தின் டிரெய்லர் இன்று (ஏப்ரல் 15) மாலை வெளியாகிறது. படத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர், யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தில் இருந்து ‘டோன்ட் வரி டா மச்சான்’ மற்றும் ‘எதனால’ என இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இதனை அடுத்து யாருமே எதிர்பாராத வண்ணம் நடிகர் விஷால் தனது புதிய அரசியல் கட்சியின் வேலைகளில் இறங்கியுள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கிற தேர்தலில் தான் பங்கேற்க இருப்பதாகவும் அதிரடி காட்டுகின்றார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஷாலிடம் நடிகை வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஷால், “வரலட்சுமியை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தெலுங்கில் தனக்கான ஒரு மார்க்கெட்டை அவர் உருவாக்கி உள்ளார். சமீபத்தில் ‘ஹனுமான்’ படம் பார்த்தேன். திமிரு படத்திற்கு பிறகு எனக்கு போல்டான பெண் கேரக்டர் அதுதான். தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அவர் நகர்ந்துள்ளார்”, என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடிகை வரலட்சுமிக்கு நிக்கோலாய் சச்தேவ் என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. நீண்ட நாள் காதலர்களான இவர்கள் திருமண பந்தத்திற்குள் நுழைய இருக்கின்றனர்.

முன்னதாக விஷால் – வரலட்சுமி இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை.

தற்போது ஒரு பெரும் இடைவெளிக்குப் பின்னர், நடிகர் விஷால் முதல் முறையாக மனம் திறந்து வரலட்சுமி குறித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியங்கா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’ஒரே நாடு ஒரே தலைவர்’ என மக்களை அவமதிக்கிறது பாஜக : ராகுல் காந்தி

ஷங்கர் மகளுக்கு ‘கோலாகலமாக’ நடந்த திருமணம்… திரண்டு வந்த திரையுலகினர்!

பிரபல சீரியல் நடிகைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரல் ஆகும் பதிவு…!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts