முதல் ஆளாக வாக்களித்தார் அஜித்
சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் அஜித் இன்று (ஏப்ரல் 19) வாக்களித்தார்.
தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் காலையிலேயே தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடி மையத்திற்கு நடிகர் அஜித் இன்று காலை 6.40 மணிக்கு வந்தார்.
அப்போது மாதிரி வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்ததால், 20 நிமிடங்கள் காத்திருந்தார். பின்னர், முதல் ஆளாக அஜித் தனது வாக்கை செலுத்தினார்.
வாக்களிக்க அஜித் வந்ததால், அப்பகுதியில் ரசிகர்கள் கூடினர். அஜித் தனது வாக்கை செலுத்திவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் சென்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!