நடிகர் விஷ்ணு விஷால் விக்ராந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக உள்ள படம் லால் சலாம். இந்தப் படத்தின் ப்ரோமோஷன்காக நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து பேட்டிகள் அளித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த பேட்டிகளில் படத்தைப் பற்றியும் நடிகர் ரஜினிகாந்த் பற்றியும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால் அவர் நடித்த சூப்பர் ஹிட் ஆன இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியிருந்தார்.
அவர் பேசியதாவது, இன்று நேற்று நாளை 2 படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு, அந்த படத்தை தொடங்க தொடர்ந்து முயற்சி செய்தோம் ஆனால் அது தள்ளிப் போய் கொண்டே இருந்தது. தற்போது அந்த படத்தின் நிலவரம் குறித்து எனக்கு தெரியவில்லை. அந்தப் படத்திற்காக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இன்று நேற்று நாளை 2 படத்தை முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமாரின் உதவி இயக்குனர் எஸ்.பி. கார்த்தி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்...
– கார்த்திக் ராஜா
அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு ரத்து!
சரி.. இனி யாரு தளபதி? : அப்டேட் குமாரு