இந்திய குடும்பங்களில் பண்டிகைக் காலங்களிலும் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறப்படும் லட்டுகள் பலவிதம். மாநிலங்களுக்கு மாநிலம் பல்வேறு பக்குவங்களில் செய்யப்படும் லட்டு சுவைகளிலும் மாறுபடும் நிலையில் உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு சத்தான வேர்க்கடலை லட்டு செய்து பரிமாற இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
வேர்க்கடலை – 200 கிராம்
வெல்லம் – 150 கிராம்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
நெய் – 25 கிராம்
எப்படிச் செய்வது?
வெல்லத்தைப் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் வேர்க்கடலையைச் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை சூடாக இருக்கும்போதே, வெல்லம், ஏலக்காய்த்தூளைத் சேர்த்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்தவற்றை வாயகன்ற பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். நெய்யை சூடாக்கி, அரைத்த கலவையில் சேர்த்து, சூடாக இருக்கும்போதே கைகளில் நெய்யைத் தடவிக் கொண்டு உருண்டை பிடித்தால், வேர்க்கடலை லட்டு ரெடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: தட்டைப்பயறு வடை
கிச்சன் கீர்த்தனா: கேரட் டீடாக்ஸ் ஜூஸ்!
ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா? அப்டேட் குமாரு