அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு ரத்து!

Published On:

| By christopher

Case against Minister K.N.Nehru cancelled

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 2) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு திருச்சி பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி ஒன்றுகூடி பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இதுதொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் கே.என் நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது.

அப்போது, திருச்சி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் கே.என் நேரு மற்றும் அன்பழகன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சரி.. இனி யாரு தளபதி? : அப்டேட் குமாரு

”செய்யும் தொழில் மேல் சத்தியம்” நடிகை தன்யா பாலகிருஷ்ணா விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment