கருடன் : கையில் கட்டுடன் ஒரே டேக்கில் டப்பிங்… சூரி அசத்தல்!

சினிமா

விடுதலை படத்தின் வெற்றிக்கு பின் வெற்றிமாறனுடன் விடுதலை 2, பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி, துரை செந்தில்குமாருடன் கருடன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் நடிகர் சூரி .

சமீபத்தில் துரை செந்தில் குமார் – சூரி கூட்டணியில் உருவாகியுள்ள கருடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் சசிகுமார், உண்ணி முகுந்தன், சமுத்திரகனி, ரேவதி ஷர்மா, ரோஹிணி ஹரிப்ரியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குனர் வெற்றி மாறன் கதை எழுதியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபில்ம் கம்பெனி ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது.

இந்நிலையில் கருடன் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து ஒரு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கையில் காயம் ஏற்பட்டு கட்டு போட்டுள்ள நடிகர் சூரி ஒரே டேக்கில் நீளமான வசனத்தை டப்பிங் பேசி அசத்தியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

INDvsENG 1st Test : முதல்நாளில் இந்தியா ஆதிக்கம்!

ஆம்னி பேருந்து: தவறான செய்தியைப் பரப்பினால் நடவடிக்கை… அமைச்சர் எச்சரிக்கை!

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஸ்டண்ட் சில்வா

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *