ram charan upset on shankar
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்கு படம் கேம் சேஞ்சர். இப்படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுத, ஷங்கர் திரைக்கதை எழுதி இருக்கிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ கேம் சேஞ்சர் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
நடிகர் ராம் சரணுடன் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ’ஜரகண்டி’ பாடல் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சில காரணத்தினால் பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது கேம் சேஞ்சர் ஷூட்டிங்கும் தாமதமாவதால் நடிகர் ராம் சரண் இயக்குநர் ஷங்கர் மீது அதிருப்தியில் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களிலும் ஷங்கர் ஒரு நேரத்தில் பணியாற்றி வந்தார்.
தற்போது இந்தியன் 2 படத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் இயக்குநர் ஷங்கர் முழுக்க முழுக்க இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதன் காரணமாகவே கேம் சேஞ்சர் படத்தின் மைசூர் படப்பிடிப்பு தாமதமாகி உள்ளது.
இதனால் கடுப்பான ராம் சரண் கேம் சேஞ்சர் படப்பிடிப்பை விரைவில் முடிக்க வேண்டும் என்று ஷங்கருக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
கேம் சேஞ்சர் படத்திற்கு பின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் தனது 16வது படத்தில் நடிக்க உள்ளார்.
அதற்காகத்தான் ‘கேம் சேஞ்சர்’ படத்தை சீக்கிரமாக முடித்தாக வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திடமும் ராம் சரண் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ram charan upset on shankar
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா