அறிமுக இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆலம்பனா.
இந்த படத்திற்கு, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ‘டாக்டர்’, ‘அயலான்’ ஆகிய படங்களை தயாரித்துள்ள கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் ‘ஆலம்பனா’ படத்தை தயாரித்துள்ளது. அலாவுதீனும் அற்புத விளக்கும் கான்செப்ட்டில் பேண்டஸி கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. நடிகர் முனிஸ்காந்த் பூதம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆலம்பனா படத்தில் நடிகர் வைபவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
துரதிர்ஷ்டசாலியாக கருதப்படும் ஹீரோவுக்கு (வைபவ்) ஒரு அற்புத விளக்கு கிடைக்கிறது. அற்புத விளக்கில் இருந்து வெளிவரும் பூதம் (முனீஸ்காந்த்) அடுத்த 15 நாட்களுக்கு ஹீரோவின் ஆசைகளை நிறைவேற்றி தருவதாக வாக்களிக்கிறது. அதன் பிறகு ஹீரோவின் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவர் ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறியதா என்பதே ஆலம்பனா படத்தின் ஒன் லைன்.
வரும் டிசம்பர் 15 ஆம் தேதி ஆலம்பனா படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லோகேஷின் Fight Club படத்தை ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் யாருன்னு பாருங்க!