மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை நேரில் பாராட்டிய சிம்பு

Published On:

| By christopher

Simbu praised the Manjummal Boys

சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி ரிலீஸ் ஆன மலையாளத் திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ்.

இப்படம் கடந்த 2008-ம் ஆண்டு குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது பலரையும் கவனிக்க வைத்தது. அதோடு படத்தில் இடம்பெற்ற கமலின் குணா பட பாடல் கேரளாவைக் காட்டிலும் தமிழக ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தது.

கடந்த ஒருமாதமாக திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் மஞ்சும்மல் பாய்ஸ், தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கு அதிகமாகவும், உலகளவில் ரூ.200 கோடிக்கு அதிகமாகவும் வசூலித்துள்ளது. இதன்மூலம் ரூ.200 கோடி மைல்கல்லை எட்டிய முதல் மலையாள படம் என்கிற சாதனையையும் தன்வசம் ஆக்கி உள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த கமல்ஹாசன், தனுஷ், விக்ரம், உதயநிதி உள்ளிட்ட பிரபலங்கள் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகர் சிம்புவும் லேட்டஸ்டாக இணைந்துள்ளார். மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை அண்மையில் பார்த்த நடிகர் சிம்பு, அப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் மற்றும் டெக்னிக்கல் டீமை நேரில் அழைத்து பாராட்டியதோடு, படம் குறித்து அவர்களுடன் கலந்துரையாடி இருக்கிறார்.

இதனையடுத்து எஸ்டிஆர்48 பட லுக்கில் நடிகர் சிம்பு மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”எனது முன்னாள் நண்பருக்கு எதிராக போட்டியிடுகிறேன்” : டிடிவி தினகரன்

தேனி, திருச்சி அமமுக வேட்பாளர்களை அறிவித்தார் டிடிவி தினகரன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel