திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியான் மற்றும் பிரபாகர் ராஜா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகளான ஏகாம்பரம் மற்றும் பிரபு ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 2 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “திமுகவின் பொதுக் கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதீயாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள், பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத, காவல்துறையையின் பொறுப்பாளராக இருக்ககூடிய முதல்வருக்கு எனது கடுமையான கண்டனங்கள்,குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
இது போன்ற தொடர் சம்பவங்கள் , இவரது ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, நம்மைக் காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை, உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
‘விலை’ மாமணிகளா? – விசாரணை நடத்த உத்தரவு!
அரசு ஊழியர்கள் போராட்டம்: முதல்வரை சந்தித்த பின் முக்கிய முடிவு!
Comments are closed.