இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ‘குளோஸ்’ செய்த சீரியல் நடிகை… பின்னணி என்ன?

சினிமா

பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை திடீரென குளோஸ் செய்துள்ளார்.

சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் வழியாக சின்னத்திரையில் தடம் பதித்தவர் பிரியங்கா நல்காரி. அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பிரியங்காவின் நடிப்பு அதில் வெகுவாக பாராட்டப்பட்டது.

இதையடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சீதா ராமன்’ சீரியலில் நாயகியாக பிரியங்கா நடித்தார். தற்போது அதே டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நள தமயந்தி’ சீரியலில் பிரியங்கா நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக இருந்த பிரியங்காவிற்கு சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்கள் இருந்தனர். இந்தநிலையில் திடீரென அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டினை டெலிட் செய்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

REBEL: எப்படி இருக்கிறது?… ரசிகர்கள் விமர்சனம்!

ஏனெனில் இன்று உலகம் முழுவதுமுள்ள பிரபலங்கள் புரமோஷன் தொடங்கி ரசிகர்களை தொடர்பு கொள்வது வரை, அனைத்திற்கும் சமூக வலைதளங்களைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

நிலைமை இப்படியிருக்க, அதிக பாலோயர்களை கொண்டிருந்த நடிகை பிரியங்கா திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்தது ஆச்சரியமாக உள்ளது.

முன்னதாக, தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை நிரந்தரமாக டெலிட் செய்வதாகவும், புரோமொஷனுக்கு என ரசிகர்கள் அனுப்பிய பொருட்களை திருப்பி அனுப்பி விடுவதாகவும், பிரியங்கா தெரிவித்து இருக்கிறார்.

GOLD RATE: சட்டென மாறியது விலை… எவ்ளோ கொறைஞ்சிருக்குன்னு பாருங்க!

மேலும் தனக்கு இதுவரை ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் அவர் உருக்கமாக பதிவிட்டு உள்ளார். சமீபத்தில் பிரியங்கா தன்னுடைய கணவரை பிரிந்த நிலையில், அதுதொடர்பாக தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்ததாகவும் இதனால் தான் பிரியங்கா இப்படி ஒரு முடிவினை எடுத்ததாகவும் தெரிகிறது.

கசப்புகளை மறந்து மீண்டும் பிரியங்கா நல்காரி இன்ஸ்டாகிராமிற்கு வருவாரா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிற்பகல் 3.30 மணிக்கு ’அமைச்சர்’ ஆக பதவி ஏற்கிறார் பொன்முடி

மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000… ’நீட்’டுக்கு மாற்றுத் தேர்வு : அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

2ஜி வழக்கு – சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனு ஏற்பு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *