REBEL: எப்படி இருக்கிறது?… ரசிகர்கள் விமர்சனம்!

Published On:

| By Manjula

ஜி.வி.பிரகாஷ், மமிதா பைஜூ, மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்டோரின் நடிப்பில் இன்று (மார்ச் 22) வெளியாகி இருக்கும் படம் ‘ரெபெல்’.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ்.

காதல் மட்டுமின்றி ஆக்ஷனுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ‘ரெபெல்’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. ஜி.வி.பிரகாஷ் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கும் ‘ரெபெல்’ ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.

https://twitter.com/rs_prakash3/status/1771012798241477079

”கேரளாவின் பாலக்காட்டில் சென்று படிக்கும் தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை இப்படம் எடுத்து காட்டியுள்ளது”, என ஆர்.எஸ்.பிரகாஷ் என்னும் ரசிகர் தெரிவித்து இருக்கிறார்.

https://twitter.com/balajesaar/status/1771003316933435816

பாலாஜி என்னும் ரசிகர், ”40 வருடங்களுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை எடுத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். படத்தின் இடைவேளை மற்றும் பின்னணி இசை என அனைத்தும் நன்றாக உள்ளது”, என மனதார பாராட்டி இருக்கிறார்.

https://twitter.com/AjayGnanamuthu/status/1771010920418005371

”ரெபெல் நன்றாக எடுக்கப்பட்டு உள்ளது. அறிமுக இயக்குநர் நிகேஷிற்கு பாராட்டுகள். ஜி.வி.பிரகாஷ் முதிர்ச்சியான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர். படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்”, என இயக்குநர் அஜய் ஞானமுத்து வாழ்த்தி இருக்கிறார்.

இதுபோல மேலும் பலரும் ‘ரெபெல்’ படம் நன்றாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

2ஜி வழக்கு – சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனு ஏற்பு!

GOLD RATE: சட்டென மாறியது விலை… எவ்ளோ கொறைஞ்சிருக்குன்னு பாருங்க!

பாமக வேட்பாளராக போட்டியிடுவது ஏன்? : தங்கர் பச்சான் விளக்கம்!

9 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்தது பாமக!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment