ஆர்.ஆர்.ஆர் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் தெலுங்கு சினிமாவின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண். ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பின் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கேம் சேஞ்சர்’ படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். கேம் சேஞ்சர் படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுத, ஷங்கர் திரைக்கதை எழுதி இருக்கிறார். நடிகர் ராம் சரணுடன் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ கேம் சேஞ்சர் படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
#GameChanger pic.twitter.com/UhrDpTrg9W
— Sri Venkateswara Creations (@SVC_official) November 11, 2023
சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ’ஜரகண்டி’ பாடல் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிந்த நிலையில், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கிறோம் என்றும், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
தீபாவளிக்கு மழை இருக்கா?: வானிலை நிலவரம்!
இஸ்ரேலை தொடர்ந்து… ஒரு லட்சம் இந்தியர்களை கேட்கும் தைவான்!