மேயாத மான், ஆடை, குலு குலு போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ரத்ன குமார். இவர் தனது நெருங்கிய நண்பரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதில் லோகேஷ் உடன் இணைந்து பணியாற்றினார்.
அதன்பிறகு லோகேஷ் இயக்க போகும் தலைவர் 171 படத்திலும் ரத்ன குமார் பணியாற்றுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த படத்தில் பணியாற்ற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் லியோ வெற்றி விழா மேடையில் ரத்ன குமார் பேசிய சில விஷயங்கள் ரஜினி ரசிகர்களை காயப்படுத்தி விட்டதால் தான் என்று கூறப்பட்டது.
ஆனால் லோகேஷ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு புதிய படத்தை ரத்ன குமார் இயக்க உள்ளார். அதனால் தான் தலைவர் 171 படத்தில் அவர் பணியாற்ற வில்லை என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள சர்தார் 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணியில் பி.எஸ்.மித்ரன் உடன் இணைந்து ரத்ன குமாரும் பணியாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது. லோகேஷ் தயாரிப்பில் ரத்ன குமார் இயக்க இருந்த படத்தின் பணிகள் தொடங்க தாமதமாவதால் சர்தார் 2 படத்தில் பணியாற்ற ரத்ன குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? – நிதிஷ்குமார் விளக்கம்!
தமிழ்நாட்டில் சிஏஏவை கால்வைக்க விடமாட்டோம் : ஸ்பெய்னில் இருந்து ஸ்டாலின் ட்வீட்!
டாடா