‘இவன்லாம் என்ன பண்ணி’… வெளிப்படையாக பேசிய விஷால்

சினிமா

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். ஆக்ஷன் ஹீரோவாக மாஸ் காட்டக்கூடியவர்.

‘செல்லமே’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், மருது போன்ற எண்ணற்ற ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் நடித்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று நூறு கோடி கிளப்பில் இணைந்தது.

நடிகர் விஷாலுக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் கனவு என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார்.

இதற்காக ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஆனால் எதிர்பார்க்காத விதமாக இவர் நடித்த படம் ஹிட்டாகவே தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஷால் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போகிறார். மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான ‘துப்பறிவாளன்’ படம் ஹிட் அடித்தது. இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி செய்தனர்.

ஆனால் இருவருக்கும் இடையே எழுந்த ஈகோ பிரச்சினை காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் இயக்கவிருக்கிறார்.

இது பற்றி பேட்டி ஒன்றில் கூறிய நடிகர் விஷால், “துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங் வருகிற மே 5-ம் தேதி ஆரம்பிக்கும். இவனெல்லாம் என்ன பண்ணி கிழிக்க போறான்? என்று பலர் நினைக்கலாம்.

ஆனால் இதுதான் சரியான தருணம். இதை சவாலாக எடுத்துக்கொண்டு சிறந்த படத்தைக் கொடுக்க முயற்சிப்பேன். மிஷ்கின் சாருக்கு நன்றி. அவரால்தான் இப்பொழுது இயக்குனராகி இருக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

இதனால் விரைவில் விஷாலின் இயக்குநர் கனவு நனவாக உள்ளது. வரும் ஏப்ரல் 26-ம் தேதி ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செல்போன் ஒட்டுக்கேட்பு : தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

IPL 2024: முஸ்தபிசுர் தொடர்ந்து சென்னைக்காக விளையாடுவாரா?… வெளியான புதிய தகவல்!

Thug Life: மீண்டும் இணைந்த நடிகர்.. ஒரு வழியாக முடிவுக்கு வந்த சர்ச்சை..!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *