தீபாவளிக்கு மழை இருக்கா?: வானிலை நிலவரம்!

Published On:

| By Monisha

there is no rain on diwali 2023

தமிழகத்தில் தீபாவளியன்று கனமழை இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. there is no rain on Diwali 2023

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று (நவம்பர் 11) முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானிலை நிலவரம்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

நவம்பர் 14 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 40 முதல் 45 கிலோ மீட்டர் கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நவம்பர் 15 ஆம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. there is no rain on Diwali 2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

இஸ்ரேலை தொடர்ந்து… ஒரு லட்சம் இந்தியர்களை கேட்கும் தைவான்!

பெண் பத்திரிக்கையாளர் புகார்: நடிகர் சுரேஷ் கோபிக்கு நோட்டீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel