இந்திய மைக்கல் ஜாக்சன் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர் நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா. இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘முசாசி’.
அறிமுக இயக்குனர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ அதிக பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
VTV கணேஷ், மாஸ்டர் மகேந்திரன், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். லீ இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இலங்கையில் முசாசி படப்பிடிப்பு நடைபெற்ற போது படக்குழுவினரை கௌரவிக்கும் வகையில் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன பிரபுதேவாவையும் படக்குழுவினரையும் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன் முசாசி படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
கடந்த வாரம் இந்த படத்தில் இருந்து “ஸ்டார் லைட்” என்ற பாடலை பட குழு வெளியிட்டது. அந்த பாடலும், பிரபுதேவாவின் நடனமும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் Prevue வீடியோவை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த prevue வீடியோ முழுவதிலும் செம எனர்ஜெடிக்கான ஒரு இங்கிலீஷ் ராப் பாடல் இடம் பெற்றிருக்கிறது. வீடியோவின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை பிரபுதேவாவின் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்து இருக்கிறது.
இதுவரை யாரும் பார்க்காத வகையில் ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக பிரபுதேவா இந்த படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
”பாஜக ஆட்சியில் 90% வழக்குகள் எதிர் கட்சியினர் மீது தான்” : கனிமொழி குற்றச்சாட்டு!
சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? : ஸ்டாலின் கேள்வி!