Santhanam 80s Buildup Movie First Look

கமல் ரசிகராக சந்தானத்தின் “பில்டப்”: ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சினிமா

டிடி ரிட்டன்ஸ் படத்திற்கு பிறகு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான  “கிக்” திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை.  தற்போது இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் சந்தானம் 80’s பில்டப் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சந்தானத்துடன் கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனிஷ்காந்த், ப்ரீத்தி ராதிகா, மொட்ட ராஜேந்திரன், தங்கதுரை, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இன்று (அக்டோபர் 23ஆம் தேதி) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம் ஓர் கமல் ரசிகராக நடித்துள்ளார். கமல் ரசிகர் மன்றம் பெயர் பலகை முன் சந்தானம் 80ஸ் கெட்டப்பில் மாஸாக நிற்பது போல ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது.

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் வெளியான குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படம் சந்தானத்திற்கு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் ராஜா

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

சாம்சங் அறிமுகப்படுத்தும் ‘Galaxy tab A9′!

அஜித் வீட்டின் சுவரை இடித்த அரசு: காரணம் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *