Will Leo release in Rohini Theatre

ரோகிணி தியேட்டரில் லியோ வெளியாகுமா?

சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. இந்தப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் தயாரிப்பு தரப்பில் படம் பற்றிய செய்திகள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் மட்டுமே வெளியிட்டு வந்தது.

படத்திற்கான செய்தி தொடர்பாளர் மூலம் ஊடகங்களுக்கு எந்தவொரு செய்தியும் வழங்கப்படவில்லை என்பதுடன் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை அதிகாரபூர்வமாக சந்திக்கவில்லை.

தங்களுக்கு சாதகமாக செய்தி வெளியிடும் வலைத்தளங்களுக்கு மட்டும் லோகேஷ் கனகராஜ் பேட்டி கொடுத்துள்ளார்.

அந்தப் பேட்டியை செய்திகளாக அவரவர் வசதிக்கு ஏற்ப ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

நாளை லியோ படம் வெளியாகவுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் 70%, 80%, 85% என்கிற விகிதாச்சார அடிப்படையில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்துள்ளனர் லியோ படத்தின் விநியோகஸ்தர்கள்.

இந்த நடைமுறையை சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் திரையரங்குகள் ஏற்க மறுத்துவிட்டன.

இந்த நிலையில் பிவிஆர் நிறுவனம் நடத்தும் திரையரங்குகளில் 57% , ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் திரையரங்குகளில் 60% சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் 65% என்கிற அடிப்படையில் லியோ படத்தை திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டு முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கு 60%க்கு மேல் பங்கு தொகை வழங்க முடியாது என்பதில் உறுதியாக இருப்பதால் அந்த திரையரங்கில் லியோ படம் திரையிடுவதற்கான ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லை.

விநியோகஸ்தர் கேட்பது 70%. ரோகிணி திரையரங்கம் 60% என கூறியதில் இருந்து பின்வாங்கி படத்தை திரையிட போகிறதா இல்லை விநியோகஸ்தர் 60% க்கு ஒப்புக்கொள்ளபோகிறாரா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

இதனிடையே லியோவை இங்கு திரையிடமாட்டோம் என்றும் ரோகிணி திரையரங்கம் முன்பு போர்டு வைக்கப்பட்டிருப்பதும் விஜய் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் கவனம் முழுவதும் ரோகிணி திரையரங்கை நோக்கியுள்ளது.

இராமானுஜம்

மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி பரிசு!

மருத்துவமனை பிளாட்பாரத்தில் மயக்க மருந்து இல்லாமல் ஆபரேஷன்: காசா கொடுமை!

மனிதம் மரத்து போய்விட்டதா?: மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *