சவரக்கத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதித்யா. தற்போது இவரது இயக்கத்தில் வித்தார்த், பூர்ணா, திரிகன், சுபஶ்ரீ ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் டெவில். இந்த படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார். மாருதி ஃபிலிம்ஸ் மற்றும் H பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 30) டெவில் படத்தில் இடம்பெற்றுள்ள “கடவுளுக்கு கோரிக்கை” என்ற பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. விஜய் டிவி புகழ் பாடகர் பிரியங்கா என்.கே இந்த பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடலுக்கு இசையமைத்தது மட்டுமின்றி பாடல் வரிகளையும் மிஷ்கின் எழுதியிருக்கிறார்.
கடந்த வாரம் இந்த படத்தில் இருந்து பெருந்திணை என்ற பாடல் வீடியோ வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 02 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
நெல்லை மாநகராட்சி கூட்டம்: மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கோஷம்!
பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற கனிமொழி : காரணம் என்ன?