பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற கனிமொழி : காரணம் என்ன?

Published On:

| By Kavi

Kanimozhi meet Premalatha Vijayakanth

Kanimozhi meet Premalatha Vijayakanth

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தனது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் பிரேமலதா வீட்டுக்குச் சென்று மறைந்த விஜயகாந்த் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததோடு, ஜனவரி 2ஆம் தேதி திருச்சி வந்திருந்த போது, ‘அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்’ என புகழாரம் சூட்டினார்.

அதோடு மட்டுமல்லாமல் தனது பிளாகில், “கேப்டனுக்கு ஓர் அஞ்சலி” என தலைப்பிட்டு உருக்கமான பதிவையும் வெளியிட்டிருந்தார். அதில் எனது அன்பான நண்பனை இழந்துவிட்டேன் என்றும் கூறியிருந்தார்.

தொடர்ந்து விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்தது. இதனால் தேமுதிகவை வளைக்க பாஜக தீவிரமாக செயல்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, தனது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் இன்று (ஜனவரி 30) விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றார்.

அங்கு இருவரும் விஜயகாந்தின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். வீட்டில் இருந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோருக்கு ஆறுதல் கூறி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

Kanimozhi meet Premalatha Vijayakanth

கனிமொழி நேரில் சென்று விஜயகாந்துக்கு மரியாதை செலுத்திய நிலையில், தேமுதிகவை திமுக வளைக்க பார்க்கிறதா எனவும் இன்று காலை முதல் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது

இதுகுறித்து கனிமொழிக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, “ராஜாத்தி அம்மாள் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். கனிமொழியும் சென்னை, தூத்துக்குடி, டெல்லி என பிஸியாக இருந்தார். இந்நிலையில் நேரம் கிடைத்ததும் தனது அம்மாவுடன் சென்று பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதில் ஒரு துளி அரசியல் கூட கிடையாது” என்றனர்.

அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பலரும் தினம்தோறும் பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

INDVsENG: மொத்தமாக விலகும் கோலி… இதுதான் காரணமா?… வெளியான அதிர்ச்சி தகவல்!

தோனியை விட அதிகமாக ஐபிஎல் டைட்டிலை வென்ற வீரர்கள்

Kanimozhi meet Premalatha Vijayakanth

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share