bigg boss season 7 october 20 episode

பிக் பாஸ் சீசன் 7: கேப்டனை மதிக்காத ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்!

சினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனை பொறுத்தவரை அறுந்த வாலு பசங்க இருக்கும் ஸ்மால் பாஸ் vs அப்பாவித் தனங்கள் நிறைந்த பிக் பாஸ். சீசன் முழுக்க இதைக் கொண்டே தான் நகர்கிறது. அந்த வகையில் இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று, தனது கேப்டன் கெத்தை எப்படியாவது நிரூபித்துக் காட்ட வேண்டுமென யுகேந்திரன் நினைக்கிறார்.

அதற்கு முன் இன்னும் தீரவில்லை கூல் சுரேஷ், அக்‌ஷயா பஞ்சாயத்து. ‘நீ சப்பாத்திக்கு எண்ணெய் ஊத்தி சாப்பிட மாட்ட, ஆனா கார சட்னி வைச்சி சாப்பிடுவியா’ என மூன்று நாட்களுக்கு முன்பு கேட்ட அதே கேள்வியையே மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார் அக்‌ஷயாவிடம். அக்‌ஷயா அவரிடம் பலமுறை விளக்க முயன்ற முயற்சிகள் வீணாகின.

bigg boss season 7 october 20 episode

அதைத் தொடர்ந்து, தொடர் பகையாக நீடித்து வரும் மணி – ரவீனா vs மாயா – பூர்ணிமா இடையே ஒரு சின்ன வாய் மோதல் நடைபெறுகிறது. அவ்வளவு பெரிய விஷயம் அல்ல, மாயா:‘நீ கிச்சன விட்டு இறங்கு’, ரவீனா: ‘நீ சொன்னா நான் இறங்க முடியாது’ என இப்படியே பேசிக்கொண்ட சில்லறை சண்டை தான். ஆனாலும், இந்த பஞ்சாயத்து கமல் சார் வரை போகும் போலும்.

bigg boss season 7 october 20 episode

இந்த வார ஷாப்பிங் கடனிற்கான டாஸ்கை அறிவிக்கிறார் பிக் பாஸ். ’பின் பால் டாஸ்க்’ எனும் எந்த சூரனும் செய்ய முடியாத ஒரு டாஸ்கை கொடுத்து, அதில் தோற்றால் வீட்டில் சமைக்கும் சாப்பாட்டை பிக் பாஸ் வீட்டார் சாப்பிடக் கூடாது என்கிற விதியையும் போட்டு விட்டார். வழக்கம் போல் பிக் பாஸ் வீட்டார் அதில் தோல்வியடைய, சாப்பாடு கட் செய்யப் படுகிறது. விடுவார்களா நமது ஸ்மால் பாஸ் வீட்டு வாலுகள்..? உடனே வெறுப்பேற்ற தொடங்க, அவர்களை பிரான்க் செய்ய ஒரு விஷயத்தை சொல்கிறார் யுகேந்திரன்.

’நான் கேப்டன், நான் சொல்றேன் நீங்க சமைக்க கூடாது. அதை சொல்ல எனக்கு பவர் இருக்கு’ என சொல்ல, ‘இப்போ நீங்க மட்டும் சாப்பாட வைச்சி விளையாடுறீங்களே’ என மாயா கேட்க, வாதம் நீடிக்கிறது. இருந்தாலும் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் செய்த ரகளை அளவுக்கு பிக் பாஸ் வீட்டாரால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. அதிலும் ஒரு பெரிய மனுஷன் சாப்பாடு வேண்டுமென கேட்டபோது, ‘சாப்பாடு போ’ என பூர்ணிமா சொன்னது எல்லாம் உச்சகட்ட இன்சல்ட்டே.

bigg boss season 7 october 20 episode

ஒரு வழியாக சரியாகக் கூட அந்த பிரான்க்-ஐ முடிக்காமல் கை விட்டார் யுகேந்திரன். ஆனால், இத்தனை கலவரத்திலும், ‘நீங்க என்ன வேணா பேசுங்க, ஆனா ரூல்ஸ பத்தி என்கிட்ட பேசாதீங்க’ என தனது முக்கியமான வசனத்தை பேசி சென்றார் பிரதீப். அவரது கேமே தனி தான். ‘உங்களுக்கு சாப்பாடு வர மூணு ஐடியா தரேன், அடுத்த வாரம் என்ன கேப்டன் ஆக்குறீங்களா..?’ என கலவரத்தின் நடுவே பிக் பாஸ் வீட்டாரிடம் பேரம் பேசியது எல்லாம் வேற லெவல்.

ஆனால் அதற்கு எந்த மரியாதையும் இல்லாமல் போனது வேறு கதை. இருந்தாலும், அங்குள்ள போட்டியாளர்களில் ஒரு ஸ்மார்ட்டான பிளேயராக பிரதீப்பை நிச்சயம் கூறலாம். அடுத்ததாக நடந்த ’ஃபேஷன் வாக்’ டாஸ்க்கில் இந்த சீசன் வரலாற்றின் முதல் முறையாக வினுஷா வெற்றி பெற்றார். அவரது ஜோடி கூல் சுரேஷும் வெற்றி பெற்றார். கூல் சுரேஷ் அப்படியென்ன வாக் செய்தார் என எபிசோட் பார்க்காதவர்கள் பார்க்க நேரிட்டால், கம்பெனி பொறுப்பல்ல.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

மாமியார்களும் மருமகள்களும் ஏன் ஒற்றுமையாக இருப்பதில்லை?

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு ஸ்நாக்ஸ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *