தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த பட இயக்குநர் குறித்த, தகவலொன்று வெளியாகி இருக்கிறது.
‘அன்னபூரணி’ படத்தை தொடர்ந்து ‘டெஸ்ட்’, ‘எல்ஐசி’, ‘மண்ணாங்கட்டி’, ‘தனி ஒருவன் 2’ ஆகிய படங்களை நயன்தாரா கைவசம் வைத்துள்ளார்.
இதேபோல ‘ஜெயிலர் 2’ படத்திலும் ரஜினிகாந்தின் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதோடு அவரது பெயர் சூட்டப்படாத 81-வது படமும் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்தநிலையில் நயன்தாராவின் புதிய படத்தினை ரசிகர்களின் பேவரைட் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் இயக்கவிருப்பதாக தெரிகிறது.
நீண்டநாட்கள் கழித்து சசிகுமார் இயக்கவிருக்கும் இப்படம் பெண்ணை மையப்படுத்திய கதை என்றும், இதில் நயன்தாராவின் கதாபாத்திரம் வலுவானதாக அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நடிக, நடிகையர் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இந்த கூட்டணி இணைவது உறுதியானால், அந்தப்படம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்றத் தேர்தலைத் தைரியமாக எதிர்கொள்வேன் – சௌமியா அன்புமணி
இளையராஜா பாடல்களை பயன்படுத்த அனுமதிகோரி வழக்கு: நீதிபதி விலகல்!
அம்மா ஒரு வேட்பாளர்… மகன் ஒரு வேட்பாளர்: காங்கிரசில் நடக்கும் குழப்பம்!