அப்பல்லோவில் இருந்து அஜித் டிஸ்சார்ஜ்!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமாருக்கு நேற்று (மார்ச் 8) அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், இன்று அதிகாலை (மார்ச் 9) டிஸ்சார்ஜ் ஆனார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கடந்த மார்ச் 7-ஆம் தேதி ஜெனரல் செக்கப் செய்துகொள்வதற்காக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ரத்த பரிசோதனை, இசிஜி எடுக்கப்பட்டது. கூடுதலாக காது, மூக்கு, தொண்டை டாக்டரும் பரிசோதனை செய்தனர்.
பின்னர் கழுத்து, தலைப்பகுதியில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. இந்தநிலையில், அஜித்தின் காதுப் பகுதியிலிருந்து மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகளில் ஒரு நரம்பில் சிறிய கட்டி உருவாகியிருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.
இதனையடுத்து நரம்பியல் டாக்டர், மயக்க டாக்டர், மூளை நிபுணர், இருதய டாக்டர் என ஒரு மருத்துவ குழு அஜித்திற்கு நேற்று கன்சர்வேடிவ் சர்ஜரி செய்தனர்.
அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், இன்று அதிகாலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அஜித் டிஸ்சார் ஆனார்.
அப்பல்லோ மருத்துவமனையில் எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ்கள் செல்லும் பாதையில், அஜித்தின் கார் உள்ளே சென்று அவரை பிக்அப் செய்தது. இதனை தொடர்ந்து அஜித் தனது காரில் ஏறி வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து அவர் சில நாட்கள் தனது வீட்டில் ஓய்வு எடுக்க உள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக – காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு? சென்னை வரும் டெல்லி தலைவர்கள்!
Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம்… விலை குறைய வாய்ப்புள்ளதா?