வெங்கி அட்லுரு இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தின் புதிய போஸ்டர் இன்று (அக்டோபர் 24) வெளியாகி உள்ளது.
சித்ரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்த வாத்தி திரைப்படத்தில் சம்யுதா மேனன் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தனுஷ், வாத்தி திரைப்படத்தில் பாலமுருகன் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “படிப்பு என்பது பிரசாதம் மாதிரி கொடுங்கள்…பைவ் ஸ்டார் ஓட்டல் சாப்பாடு மாதிரி விக்காதீங்க” என்று இப்படத்தில் வசனம் பேசி அசத்தியிருந்தார்.
இந்தநிலையில், இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாத்தி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் தனுஷ் ஆசிரியர் கெட்டப்பில் மிரட்டலாக சண்டையிடும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். வாத்தி ஹேஷ்டாக்கை அவர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
செல்வம்
பாகிஸ்தான் தோல்வி : தொலைக்காட்சி பெட்டியை உடைத்த ரசிகர்!
தீபாவளி பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து!