சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (மார்ச் 9) ஒரு சவரனுக்கு ரூபாய் 360 அதிகரித்து ரூபாய் 49,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 45 அதிகரித்து ரூ.6,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 400 அதிகரித்து ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 20 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 79.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 79,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மார்ச் மாத தொடக்கத்தில் லேசாக குறைந்த தங்கம் ஒரே வாரத்தில் ரூபாய் 49,000-த்தை கடந்து இன்னும் மேலே சென்று கொண்டிருக்கிறது. வெள்ளியின் விலை பைசாவில் அதிகரிக்க, தங்கத்தின் விலையோ ஆயிரங்களில் அதிகரித்துக் கொண்டுள்ளது.
இதனை வைத்து பார்க்கும்போது தங்கம் வாங்க நினைப்பவர்கள், இந்த நேரத்தில் அதுகுறித்த நினைப்பை விட்டுவிட்டு, தங்கத்தின் விலை குறையும்வரை காத்திருப்பது நல்லது. அதோடு வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதா? என்பதையும் நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘கார்த்தி 26’ டைட்டில் இதுதான்!
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு!