நடிகர் அஜித் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவரது நடிப்பில் தற்போது ‘விடாமுயற்சி’ படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, பிக்பாஸ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.
இதற்கிடையில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் தொடர்பான அறிவிப்பு இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. நீண்ட நாட்களாகவே ‘விடாமுயற்சி’ அப்டேட்டிற்காக வெறித்தனமாக காத்திருந்த ரசிகர்களுக்கு இப்புதிய அப்டேட் உச்சக்கட்ட மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்தநிலையில் அஜித் குறித்து ட்ரெண்டிங் நியூஸாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. துபாயில் ஏற்கனவே அஜித் வீடு வாங்கி வைத்துள்ள நிலையில், தற்போது துபாயில் புகழ் பெற்ற இடமாக விளங்கும் மெரினாவில் இரண்டாவது வீடு ஒன்றையும் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் துபாயில் இரண்டாவது வீடு வாங்கியுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு ரசிகர்கள் மத்தியில் நடிகர் அஜித் துபாயில் குடிபெயர போகிறாரா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இந்த 2024 புத்தாண்டு, மகள் அனஷ்காவின் பிறந்தநாள் ஆகியவற்றை அஜித் துபாயில் தான் கொண்டாடி மகிழ்ந்தார். அதோடு அடிக்கடி அங்கு விசிட் அடித்து வருவதால் குடும்பத்துடன் அஜித் அங்கே குடிபெயர்ந்தாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
– மாணவ நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பத்திரங்கள்.. மிரட்டி பணம் பறிக்கும் மோசடி: ராகுல் தாக்கு!