‘கங்குவா’ படத்தின் டீசர் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதுகுறித்து இங்கே காணலாம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி,ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கங்குவா. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
தற்போது படத்தின் போஸ்ட் புரொடொக்ஷன், விஎப்எக்ஸ் மற்றும் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 1௦ மொழிகளில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தின் ஓடிடி உரிமையினை, அமேசான் நிறுவனம் மிகப்பெரும் தொகைக்கு கைப்பற்றியுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனால் ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டினை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் டீசர் வருகிற தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 14) அன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டீசர் குறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு விரைவில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட படக்குழு முடிவெடுத்து இருக்கிறதாம்.
–கவின் மாணவ நிருபர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 19ல் மக்களவைத் தேர்தல்!
சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம்: மார்க்சிஸ்ட் வேட்பாளர்களின் பின்னணி என்ன?