பிரபல தெலுங்கு இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ’தேவரா’. அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை ஜான்வி கபூரும், சைஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் பிரம்மாண்டமாக இரண்டு பாகமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.
இந்நிலையில், தேவரா படத்தின் glimpse வீடியோவை படக்குழு அதிகாரபூர்வமாக இன்று (ஜனவரி 8) வெளியிட்டுள்ளது. அதில் முதல் காட்சியில் ஒரு பெரிய கப்பலை குறி வைத்து சிலர் கொள்ளை அடிக்கின்றனர். அந்த காட்சியை தொடர்ந்து கடற்கரை ஓரமாக பல எதிரிகளை ஜூனியர் என்டிஆர் வெட்டி சாய்க்கும் மாஸ் ஆக்சன் காட்சி இடம்பெற்றுள்ளது.
“இந்த கடலுல மீன்கள விட அதிகமா கத்தியும் இரத்தமும் கொட்டி கெடக்கு, அதனால தான் இதுக்கு பேரு செங்கடல்” என்ற வசனம், ஜூனியர் என்டிஆர் குரலில் வீடியோவின் இறுதியில் இடம்பெற்றுள்ளது.
தேவரா முதல் பாகம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கையை கூட ஏற்காதது ஏன்?: எடப்பாடி கேள்வி!
விஷ்ணு விஷாலுடன் இணையும் விஜய் சேதுபதி பட இயக்குனர்!